ஞாயிறு, 26 ஜூலை, 2015



சங்க கால இலக்கியங்களிலும், கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளிலும் பெருமையாக குறிப்பிடப்படும் மள்ளர் அல்லது மல்லர் எனப்படும் பள்ளர் இனமக்கள் காலகாலமாக வழிபடும் தெய்வம் மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்) சாமி ஆகும். குறிப்பாக சேர சோழ, மண்டலங்களான திருச்சி,கரூர்,தஞ்சாவூர்,நாமக்கல். ஆகிய மாவட்டங்களில் மருதநில பகுதியில் வாழும் மள்ளர்களாகிய பள்ளர்கள் வாழும் எல்லா இடங்களிலும் மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்)கோவில் உள்ளது. மள்ளர்களாகிய பள்ளர்கள் மட்டுமே மல்லாண்டார் சாமியை வழிபடுகின்றனர். அதே ஊர்களில் வாழும் மற்ற ஜாதியினர் யாரும் மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்) சாமியைவழிபடுவதில்லை. மள்ளர்களாகிய பள்ளர்கள் வீடுகளில் எந்த சுபநிகழ்ச்சியானாலும் மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்) சாமியை முதலில் வழிபட்டுவிட்டுதான் சுபநிகழ்சியை தொடங்கும் பழக்கம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது. முக்கியமாக மள்ளா்கள்(பள்ளா்கள்) தெருக்களில் உள்ள இந்த கோயிலானது புதிதாக உருவாக்கப்பட்டதல்ல மிக பழமை வாய்ந்தது. திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா நாகையநல்லூர் மற்றும் சில ஊர்களில் வாழும் மள்ளர்களாகிய பள்ளர்கள், மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்) சாமியை தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.சேர,சோழ மண்டலங்களில் வாழும் பள்ளா்கள், மல்லர் எனும் தன் இனத்தை நினைவுபடுத்தும் வகையில் மல்லன்,மல்லப்பன், மல்லையப்பன், மல்லையன்,மல்லீசுவரன் என்னும் பெயர்களைக் கொண்டவர்களாக உள்ளனர்.இதிலிருந்து சங்க கால இலக்கியங்களிலும், கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளிலும் பெருமையாக குறிப்பிடப்படும் மள்ளர்கள் இன்றைய பள்ளர் இனமக்கள்தான் என்பதை தெளிவாக உணர்ந்துகொள்ளலாம்.

ஆதாரம்:  


கரூா் மாவட்டம், குளித்தலை தாலுக்காவில் மள்ளா்கள்(பள்ளா்கள்) தெருக்களில் மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்)கோவில் உள்ள ஊா்கள் பின்வருமாறு:

 1)குளி்த்தலை நகரம் (பாரதி நகா், மலையப்பநகா்,தேவதானம்,மணத்தட்டை) 2)மருதூர் 3)தண்ணீா்ப்பள்ளி 4)மேட்டுமருதூர் 5)பொய்யாமணி 6)திருச்சாப்பூர் 7)நல்லூர் 8)தேவதானம் 9)வாளாந்தூர் 10)கோட்டமேடு 11)எழுனூற்றுமங்களம் 12)வதியம் 13)ஐனூற்றுமங்களம் 14)வீரவல்லி 15)மணத்தட்டை 16)குமாரமங்களம் 17)இனுங்கூர் 18)நங்கவரம் 19)சிவாயம் 20)சீகம்பட்டி 21)இராஜேந்திரம் 22)ராஜேந்திரம் 23)கூடலூர் 24)பரளி  

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்காவில் மள்ளா்கள்(பள்ளா்கள்) தெருக்களில் மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்)கோவில் உள்ள ஊா்கள் பின்வருமாறு:
 1)திம்மாச்சிபுரம் 
 2)கே.பேட்டை 
 3)கள்ளப்பள்ளி 
4)பிள்ளபாளையம்
5)மேட்டுமகாதானபுரம் 
6)சித்தலவாய் 
7)திருக்கம்புலியூர் 
8)மாயனூர் 
9)கம்மநல்லூர்
10)பிச்சம்பட்டி 
11)மணவாசி 
12)கட்டளை
13)சிந்தலவாடி
14)புலியூர்
15)மேலப்பாளையம் 
16)சனப்பிரட்டி 
17)பாப்பக்காப்பட்டி
18)இரும்பூதிப்பட்டி 
19)பஞ்சப்பட்டி 
20)வீரராக்கியம்  

கரூா் மாவட்டம், கரூா் தாலுக்காவில் மள்ளா்கள்(பள்ளா்கள்) தெருக்களில் மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்)கோவில் உள்ள ஊா்கள் பின்வருமாறு: 1) கரூா் நகரம் (நீலிமேடு,பாலம்மாபுரம்,திருக்காம்புலியுர்,திருமானநிைலையூர்)

2)நெரூா் 
3)பள்ளபாளையம் 
4)வாங்கல்
5)புலியூர் 
6)சணப்பிரட்டி 
7)ஆண்டான்கோவில் 
8)தோட்டக்குறிச்சி 
9)வெள்ளியணை 
10) மண்மங்கலம்


'''கரூா் மாவட்டம், கடவூர் தாலுக்காவில்''' மள்ளா்கள்(பள்ளா்கள்) தெருக்களில் மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்)கோவில் உள்ள ஊா்கள் பின்வருமாறு:

1)கடவூர்
2)டி.இடையப்பட்டி
3)கொசூர்
4)மாவத்தூர்
5)முள்ளிப்பாடி
6)பாலவிடுதி
7)செம்பியானத்தம்
8)தொண்டமாங்கினம்
9)வாழ்வார்மங்கலம்
10)தரகம்பட்டி